எஸ்பிஐ கொடுத்த ஷாக்…ரூ 40,000 ,ரூ 20,000_ஆக குறைப்பு….இன்று முதல் அமுல்…!!
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம், 20 ஆயிரம் ரூபாய் வரையில் மட்டுமே எடுக்கும் புதிய நடைமுறை, ( 31-ம் தேதி)இன்று முதல் அமலுக்கு வருகிறது.
எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்கில் இருந்து ஒரு நாளைக்கு ஏஎம்மில் பணம் எடுக்கும் உச்சவரம்பு நாற்பதாயிரம் ரூபாயாக இருந்தது. இந்த உச்சவரம்பை நாற்பதாயிரம் ரூபாயில் இருந்து இருபதாயிரம் ரூபாயாகக் குறைக்கப்போவதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது.
அதன்படி, கிளாசிக், மேஸ்ட்ரோ வகை ஏடிஎம் அட்டைகளுக்கான தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 40,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. மின்னணுப் பரிமாற்றம், பணமில்லா வணிக நடவடிக்கை, ஏடிஎம்களில் நடைபெறும் மோசடி பணபரிவர்த்தனையை தடுக்கும் பொருட்டும், டிஜிட்டல், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டும் எஸ்பிஐ வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஐ விளக்கம் அளித்துள்ளது.
எஸ்பிஐ வங்கி மீது ஏற்கனவே வாடிக்கையாளர்கள் பல வகையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் எஸ்பிஐயின் புதிய அறிவிப்பு வாடிக்கையாளர்களை மேலும் அதிருப்தி அடைய வைத்துள்ளது.
dinasuvadu.com