”எல்லையில் அத்துமீறினால்அடி கிடைக்கும்” -நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை..!
இந்திய எல்லையில் அத்துமீறினால் பதிலடி கிடைக்கும் என்று பாகிஸ்தானுக்கு, பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டதை அடுத்து இரு நாடுகள் இடையே சண்டை நிறுத்தம் தொடர்பான ஒப்பந்தம் கடந்த வாரம் செய்யப்பட்டது. ஆனால் அதை மீறி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதுகுறித்து இன்று டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜம்மு-காஷ்மீரில் சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கு இந்தியா மதிப்பளித்து வருவதாகக் கூறினார்
எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டால் இந்திய ராணுவம் சரியான பதிலடியை கொடுக்கும் என்று அவர் எச்சரித்தார். பயங்கரவாதமும், பேச்சுவார்த்தையும் ஒன்றாகச் செல்ல முடியாது என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.