எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களுக்கு எதிரான வழக்குகள் …!25 மாநிலங்கள் எந்தத் தகவலும் உச்சநீதிமன்றத்தின் தாக்கல் செய்யவில்லை…!
எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை என்று மாநிலங்கள் தாக்கல் செய்யவில்லை.
இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை? என்று கேள்வி எழுப்பியது. மேலும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் மீதான வழக்கை விரைந்து முடிக்க கோரிய வழக்கில் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்குகள் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து அனைத்து மாநில தலைமை செயலர்களும் அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
ஆனால் நேற்று வரையிலும் எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகள் எத்தனை என்பதை 25 மாநிலங்கள் எந்தத் தகவலும் உச்சநீதிமன்றத்தின் தாக்கல் செய்யவில்லை எனத் தகவல் தெரிவிக்கின்றது.