பாஜக மூத்த தலைவர்களில் சர்ச்சைக் கருத்துக்களை தெரிவித்து சர்ச்சைக்கு வித்திட்டுபவரான சுப்பிரமணியன் சாமி ஆவார்.இவர் மாநிலங்கவை எம்.பியும் ஆவார்.இந்நிலையில் டெல்லியில் நடைபெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் அரசியல் மற்றும் நம்பிக்கை என்கிற தலைப்பில் பேசினார் அதில் பெரும் சர்ச்சையாக நாட்டில் வெடித்து கொண்டிருக்கும் அயோத்தி விவகாரம் குறித்த பல முக்கிய தகவல்களை குறிப்பிட்டார்.
இந்நிலையில் அயோத்தி விவகாரம் குறித்து பேசிய அவர் உச்ச நீதிமன்றத்தில் தற்போது நிலுவையில் இருக்கும் அயோத்தி வழக்கானது அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் அதன் கிட்டத்தட்ட இரண்டே வாரங்களில் நமக்கு வெற்றி கிடைத்துவிடும்.இவ்வாறு தெரிவித்த அவர் எனது இரண்டு எதிர்க்கட்சிகள் என்றால் அது மத்திய அரசு மற்றும் உத்தரப்பிரதேச அரசு இவைகள் தான்.
இந்த இருவருக்கும் என்னை எதிர்க்கும் துணிச்சல் இருக்கிறதா என்ன? அவ்வாறு அவர்கள் அப்படி என்னை எதிர்த்தால் நான் அவர்களின் அரசை கவிழ்ப்பேன் என்று காட்டமாக தெரிவித்த அவர் மேலும் பேசுகையில் இருவரும் இதை செய்ய மாட்டார்கள் என எனக்கு தெரியும் என்று கூறியுள்ளார் இந்த பேச்சு பிஜேபி இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை :அம்மை நோய் வந்தால் வீட்டில் செய்ய வேண்டியதும் செய்யக்கூடாததையும் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் தெரிந்து கொள்வோம். அம்மை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் எனவும், இந்த…
சென்னை : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐபிஎல் 2025 தொடரானது தொடங்கவுள்ளது. இந்த தொடர் மார்ச்-14 ம் தேதி…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக உருமாறும் என வானிலை…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக மாறும் என்று இந்திய…
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது வலுவடைந்து உள்ளதால், நாளை புயலாக மாற வாய்ப்புள்ளது என இந்திய…