என்னுடைய பாக்கெட்டில் ஒன்றுமில்லை?இது ஒன்றும் கால்பந்தாட்டமல்ல?வி.கே.சிங் காட்டம்

Default Image

மத்திய அமைச்சர் வி.கே.சிங் இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் உடல்களை இந்தியா கொண்டு வந்த நிலையில் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப காட்டமாகி நிதானமிழந்தார்.

அமிர்தசரஸ் விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் வி.கே.சிங்கிடம் நிருபர்கள் பலியான 38 இந்தியர்களின் துயருற்ற குடும்பத்துக்கு நிவாரணம் என்ன என்று கேள்வி எழுப்பினர்.

இப்போதுதான் உடல்களைக் கொண்டு வந்துள்ளோம் மேலும் நடவடிக்கைகளை பரிசீலித்து வருகிறோம் என்று கூறியிருக்கலாம்.

மாறாக, “இது ஏதோ பிஸ்கட்களை விநியோகிப்பது போன்றதல்ல, இது மனிதர்களின் உயிர சம்பந்தப்பட்டது. புரிந்து கொள்ளுங்கள். நான் எப்படி இப்போது அறிவிக்க முடியும்? என்னுடைய பாக்கெட்டில் ஒன்றுமில்லை” என்றார்.

மேலும் நிருபர்கள் பலியானவர்களின் உறவினர்களுக்கு பணியளிப்பது பற்றி கேட்ட போது, “இது ஒன்றும் கால்பந்தாட்டமல்ல” என்று கூறியுள்ளார்.

வி.கே.சிங் இந்தக் கேள்விகளால் பெரிதும் கடுப்பாகக் காணப்பட பஞ்சாப் அமைச்சரும் முன்னாள் பாஜக பிரமுகருமான நவ்ஜோத் சிங் சித்து அவரை அமைதிப்படுத்த முயன்றார்.

ஆனால் வி.கே.சிங்கின் இத்தகைய பதில்கள் எதிர்க்கட்சியினரிடம் தவறான சிக்னல்களை அளித்துள்ளது, இதனால் சமூக வலைத்தளங்களைக் கையிலெடுத்து வி.கே.சிங்கைச் சாடி வருகின்றனர்.

ரந்தீப் சிங் சுஜ்ரேவாலா:

39 இந்தியர்கள் மொசூலில் கொல்லப்பட்டனர். மோடி அரசு தொடர்ந்து அவர்கள் குடும்பத்தினரையும் தேசத்தையும் தவறாக வழிநடத்துகிறார். அமைச்சர் வி.கே.சிங் இப்போது வெந்த புண்ணில் உப்பைத் தடவுகிறார். நிவாரணம் என்னவென்று கேட்டால் பிஸ்கட் என்று கேவலப்படுத்துகிறார். இருதயமற்றவர், வெட்கக்கேடு. என்று பதிவிட்டுள்ளார்.

டெரிக் ஓ’பிரையன்: உணர்ச்சியற்றவர், கால்பந்து, பிஸ்கட்டுகள்.. 39 பேர் உயிருக்கு பயன்படுத்தும் முறையற்ற சொற்கள், என்று சாடியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்