என்னுடைய ஆட்சி தமிழக மக்களுக்கு ரொம்ப பிடிக்கும் !ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நெகிழ்ச்சி !

Published by
Venu

ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு, ஆந்திராவில் நடைபெறும் நல்லாட்சியை தமிழக மக்கள் பாராட்டுகின்றனர் என்று  கூறினார்.

ஆளும் தெலுங்கு தேசம் கட்சியின் செயற்குழு கூட்டம் அமராவதியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி போலியானது. இந்தக் கட்சி தொடர்பான பத்திரிகை, தொலைக்காட்சிகளில் வெளியாகும் புகைப்படங்களும், வீடியோக்களும் போலியானவை. இங்கு மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகளை தமிழக மக்கள் நன்கு அறிந்துள்ளனர். இங்கு நடைபெறும் நல்லாட்சியை மனதார பாராட்டுகின்றனர். ஆனால் இங்குள்ள எதிர்க்கட்சியினருக்கு இது தெரியவில்லை.

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதாக வாக்கு கொடுத்து 5 கோடி மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்த மத்திய அரசுக்கு எதிராக எனது பிறந்த நாளான வரும் 20-ம் தேதி விஜயவாடாவில் ஒருநாள் உண்ணாவிரதம் இருக்க உள்ளேன். இதில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 13 அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். மற்ற அமைச்சர்கள் அவரவர் தொகுதிகளில் உண்ணா விரதம் இருக்க வேண்டும்.

மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சியினர் உண்ணாவிர தப் போராட்டம் மேற்கொள்ள வேண்டும். மறுநாள் 21-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் சைக்கிள் மூலம் கண்டன ஊர்வலம் நடத்த வேண்டும். 30-ம் தேதி திருப்பதியில் பொதுக்கூட்டம் நடைபெறும். அப்போது ஆந்திராவுக்கு மத்திய அரசு இழைத்த அநீதி குறித்து மக்களுக்கு விவரிக்கப்படும் என்று  ஆந்திர முதல்வர் என்.சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு., 1 கோடி இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு! மைக்ரோசாப்ட் அதிரடி அறிவிப்பு!

ரூ.25 ஆயிரம் கோடி முதலீடு., 1 கோடி இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு! மைக்ரோசாப்ட் அதிரடி அறிவிப்பு!

டெல்லி : நேற்று (ஜனவரி 6) மைக்ரோசாஃப்ட் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில்…

6 hours ago

பரபரக்கும் ஈரோடு இடைதேர்தல்! 3 பறக்கும் படை தயார்… ரூ.50,000-க்கு மேல் ஆவணங்கள் கட்டாயம்…

ஈரோடு : காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அத்தொகுதிக்கு இன்று…

6 hours ago

நேபாளத்தில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு.!

நேபாளம்: நேபாளத்தில் லாபுசே நகரில் இன்று (ஜன,7) நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 6.35 மணியளவில், நேபாள், திபெத் எல்லையில் 7.1 ரிக்டர்…

8 hours ago

அதிர்ச்சி காட்சி… கார் ரேஸ் பயிற்சியின்போது விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்!!

துபாய்: துபாயில் பயிற்சியின்போது நடிகர் அஜித் சென்ற ரேஸ் கார் விபத்தில் சிக்கியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதிவேகமாக வந்த…

9 hours ago

ஈரோடு இடைத்தேர்தல் : திமுகவுக்கு சிபிம் ‘முதல்’ ஆதரவு!

சென்னை :  ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை அடுத்து அத்தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து…

9 hours ago

இனிமேல் சட்னி அரைச்சு கஷ்டப்பட வேண்டாம்.. இந்த பூண்டு பொடியே போதும்..!

சென்னை :இட்லி தோசைக்கு ஏற்ற பூண்டு பொடி தயார் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். தேவையான…

9 hours ago