என்னடா இது கை சின்னத்துக்கு வந்த சோதனை..!கைச்சின்னத்தை ரத்துசெய்யக் கோரி பாஜக அளித்துள்ள புகார், தேர்தல் ஆணையத்தில் ஏப்ரல் 18ஆம் தேதி விசாரணை!!
காங்கிரஸ் கட்சியின் கைச்சின்னத்தை ரத்துசெய்யக் கோரி பாஜக அளித்துள்ள புகார் வரும் 18ஆம் தேதி தேர்தல் ஆணையத்தில் விசாரணைக்கு வருகிறது.
பாஜக செய்தித் தொடர்பாளர் அஸ்வினிகுமார் உபாத்யாய் தேர்தல் ஆணையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார். அதில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் சின்னமான கை உடலின் பிரிக்க முடியாத ஒருபாகமென்றும், இதைக் காங்கிரஸ் தவறாகப் பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளது.
தேர்தல் நடத்தை விதிகளின்படி வாக்குப்பதிவு நடைபெறும் இடத்துக்கு நூறு மீட்டர் தொலைவுக்குள் சின்னத்தைக் காட்டக் கூடாது என்பது புகாரில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முகவர்கள் வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களிடம் கையைக் காட்டி வாக்களிக்கக் கேட்டுக்கொள்வது நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என்றும் புகாரில் கூறப்பட்டுள்ளது.
தேர்தலை நேர்மையாக நடத்துவதை உறுதி செய்வதற்காகக் காங்கிரசின் கைச்சின்னத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.