ஜார்க்கண்டில் பழங்குடியின கிராமத்திற்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக சென்ற அரசு சாரா தொண்டு நிறுவனத்தை சேர்ந்த 5 பெண்கள், துப்பாக்கி முனையில் கடத்திச் செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்டின் ஹன்ட்டி ((Khunti)) மாவட்டத்தில் புலம்பெயர்தல், ஆள்கடத்தல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக அரசு-சாரா தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கொச்சாங் ((Kochang)) என்ற கிராமத்திற்கு சென்றுள்ளனர். அந்த பகுதிகளில் பழங்குடியின கிராம சபைகளுக்கே முழுஅதிகாரம் உள்ளது என்றும், வெளியாட்கள் யாரும் நுழையக் கூடாது என்றும் பதல்கர்கி ((Pathalgarhi)) என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் எச்சரித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அரசு சாரா தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களை அவர்கள் சென்ற காரிலேயே, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றுள்ளனர். ஆண்களை மட்டும் அடித்து உதைத்து, சிறுநீரை அருந்தச் செய்ததோடு காரிலேயே அடைத்துப்போட்டுள்ளனர்.
பின்னர் 5 பெண்களை வனப்பகுதிக்கு தூக்கிச் சென்று கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்து, அதை செல்போனில் படம்பிடித்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தங்கள் பகுதிக்குள் அனுமதியில்லாமல் அரசின் திட்டங்களை பரப்புவதற்கு நுழைய வேண்டாம் என வன்முறையில் ஈடுபட்டவர்கள் எச்சரித்ததாகவும் பாதிக்கப்பட்டவர்கள் புகாரில் கூறியுள்ளனர். இந்த அத்துமீறலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுபவர்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், விசாரணைக்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருவதாகவும் ராஞ்சி போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…