எத்தகைய பேச்சுவார்த்தை நடவடிக்கைக்கும் இந்தியாவுடன் பேசத் தயார் ! பாக். ராணுவ செய்தித் தொடர்பாளர்
பாகிஸ்தான் ராணுவம்,இந்தியாவுடனான எத்தகைய பேச்சுவார்த்தை நடவடிக்கைகளுக்கும் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தைகளிலிருந்து நழுவுவதாகவும், பேச்சுவார்த்தைகளில் இருந்து மாறுபட்ட நிலையை எடுத்து அமைதி நடவடிக்கைகளை சீர்குலைப்பதாகவும் தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. இந்நிலையில் இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆசிஃப் கஃபூர் தாங்கள் அந்த நிலையைக் கடந்துவிட்டதாகவும் எத்தகைய பேச்சுவார்த்தை நடவடிக்கைக்கும் உட்பட தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.