எதிர்க்கட்சிகளால் பா.ஜ.க. வளர்ச்சியை தாங்கிக் கொள்ள முடியவில்லை…!பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு….
பிரதமர் நரேந்திர மோடி , பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், நாட்டின் பிரதமராக இருப்பதை தாங்கிக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் ஆவேசத்துடன் செயல்படுவதாக தெரிவித்துள்ளார்
பா.ஜ.க. தொடங்கப்பட்ட 38 ஆண்டு தினத்தையொட்டி, கட்சி நிர்வாகிகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே “நமோ ஆப்” மூலம் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர், பா.ஜ.க. மீது எதிர்க்கட்சிகள் தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருவதாகத் தெரிவித்தார். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருப்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை என்று குறிப்பிட்ட மோடி, தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும் சுட்டிக் காட்டினார்.
ஏழைத் தாயின் மகனான தாம் பிரதமராக இருப்பதை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்று அவர் மேலும் தெரிவித்தார். பா.ஜ.க.வுக்கு எதிராக திட்டமிட்டு வன்முறை தூண்டப்படுவதாக குற்றம் சாட்டிய பிரதமர் மோடி, தமது கட்சியினர் பொறுமை காக்க வேண்டும் என்றும், சுயநலமின்றி நாட்டுக்காக பாடுபட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.