எதிரிகட்சிகளால் வசைபாட பட்ட பொடிப்பையன் "பப்பு"..!வைச்சருல ஆப்பு..!ராஜ் தாக்ரே தாக்கு..!!
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்கட்சிகள் பப்பு என்ற பெயர் வைத்து விமர்சித்தார்கள் ஆனால் தற்போது வெளிவந்த தேர்தல் முடிவுகள் அவர் யார் என்பதை நிருபித்தது மட்டுமல்லாமல் மதிக்கப்படும் மனிதராக உயர்ந்திருப்பதாக மகராஷ்ரா மாநில நவநிர்மான் சேவ தலைவர் ராஜ் தாக்ரே புகழாரம் சூட்டியுள்ளார்.
நடந்த 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.இந்த வெற்றி குறித்து தெரிவித்த ராகுல் இனி தான் மிக பெரிய பொறுப்பு உள்ளது என்று கூறினார்.இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் ராகுலை பொடிப்பையன் என்று அழைத்தவர்களுக்கு தனது கட்சி வெற்றியின் முலம் தடாலடியான பதிலை அளித்துள்ளார்.பப்பு என்றவர்களுக்கு வைத்தார் அல்லவா ஆப்பு என்பது போல மகராஷ்ரா மாநில நவநிர்மான் சேவ தலைவர் ராஜ் தாக்ரே கூறியுள்ளார்.
இவர் கூறிகையில் எதிர்கட்சிகளால் பொடிப்பையன் என்று ராகுலை விமர்சித்தவர்கள் தற்போது அனைவராலும் மதிக்கப்படுபவர் மற்றும் ராகுலின் தலைமை தேசிய அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதை அவருடைய செயல்பாடுகள் வெளிப்படுத்துகிறது என்று ராஜ் தாக்ரே கூறியுள்ளார்.