உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.கே.சிக்ரி,எடியூரப்பா முதலமைச்சராக பொறுப்பேற்க அழைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கின்போது, எம்எல்ஏ.க்கள் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டிருப்பது தொடர்பாக வாட்ஸ்ஆப்பில் வலம் வரும் ஜோக்கை சுட்டிக்காட்டிய போது உச்சநீதிமன்றத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது, எடியூரப்பா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த மேலும் அவகாசம் வேண்டும் எனக் கேட்டார். காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ.க்கள் மாநிலத்திற்கு வெளியே அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களும் அங்கிருந்து வெளியேறி வந்து வாக்களிப்பதற்கு வசதியாக கூடுதல் அவகாசம் தேவைப்படும் என அவர் கூறினார்.
அப்போது, தம்மிடம் 116 எம்எல்ஏ.க்கள் இருப்பதால் ரிசார்ட் உரிமையாளர்கூட ஆட்சியமைக்க உரிமை கோரலாம் என வாட்ஸ்ஆப்பில் வலம் வரும் ஜோக்கை நீதிபதி ஏ.கே.சிக்ரி நகைச்சுவையாக சுட்டிக்காட்டியதால் நீதிமன்ற அறை சிரிப்பொலியால் அதிர்ந்தது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: கிழக்கு இலங்கைக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி: 2025 ஐபிஎல் தொடர், மார்ச் 23ம் தேதி தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.…
துபாய்: சில நாட்களுக்கு முன்பு, அஜித் கார் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தற்போது, இணையதளம் முழுவதும்…
ஈரோடு: காங்கிரஸ் எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவுக்கு பிறகு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கு…
துபாய்: நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டவர். தற்போது துபாயில் நடைபெறும்…
சென்னை: வழக்கமாக ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையோடு தொடங்குவது வழக்கம். தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 6ம் தேதி…