எடியூரப்பா வழக்கின்போது,உச்சநீதிமன்றத்தில் சிரிப்பலையை ஏற்படுத்திய ரிசார்ட்டில் 116 கர்நாடக எம்எல்ஏ.க்கள் மீம்ஸ்!

Default Image

உச்ச நீதிமன்ற  நீதிபதி ஏ.கே.சிக்ரி,எடியூரப்பா முதலமைச்சராக பொறுப்பேற்க அழைக்கப்பட்டதற்கு எதிரான வழக்கின்போது, எம்எல்ஏ.க்கள் ரிசார்ட்டில் தங்கவைக்கப்பட்டிருப்பது தொடர்பாக வாட்ஸ்ஆப்பில் வலம் வரும் ஜோக்கை சுட்டிக்காட்டிய போது உச்சநீதிமன்றத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது, எடியூரப்பா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த மேலும் அவகாசம் வேண்டும் எனக் கேட்டார். காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏ.க்கள் மாநிலத்திற்கு வெளியே அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களும் அங்கிருந்து வெளியேறி வந்து வாக்களிப்பதற்கு வசதியாக கூடுதல் அவகாசம் தேவைப்படும் என அவர் கூறினார்.

அப்போது, தம்மிடம் 116 எம்எல்ஏ.க்கள் இருப்பதால் ரிசார்ட் உரிமையாளர்கூட ஆட்சியமைக்க உரிமை கோரலாம் என வாட்ஸ்ஆப்பில் வலம் வரும் ஜோக்கை நீதிபதி ஏ.கே.சிக்ரி நகைச்சுவையாக சுட்டிக்காட்டியதால் நீதிமன்ற அறை சிரிப்பொலியால் அதிர்ந்தது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்