எடியூரப்பாவுக்கு ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ் முறையிட்டது. காங்கிரஸ் முறையீட்டை ஏற்றுக்கொண்டு நள்ளிரவிலேயே உச்ச நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
விடிய விடிய விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், எடியூரப்பா முதல் மந்திரியாக பதவியேற்க தடை விதிக்க மறுத்து விட்டது. நாளை காலை 10.30 மணிக்கு வழக்கை ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், ஆளுநருக்கு அளித்த கடிதத்தின் நகலை எடியூரப்பா தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பரம், எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்ச நீதிமன்றத்துக்கு சல்யூட் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள ப.சிதம்பரம் கூறியிருப்பதாவது:-
எடியூரப்பாவுக்கு எதிரான வழக்கை இரவில் விசாரித்த உச்சநீதிமன்றத்துக்கு சல்யூட். எடியூரப்பாவாக நானிருந்தால் வழக்கு விசாரணைக்கு வரும் நாளை காலை 10.30 வரை பதவியேற்க மாட்டேன். எடியூரப்பாவின் தலைவிதியை ஆளுநரிடம் அவர் அளித்த கடிதம்தான் தீர்மானிக்கும். 104 எம்.எல்.ஏக்கள் ஆதரவு இருப்பதாகவே எடியூரப்பா குறிப்பிட்டு இருப்பார். ஆளுநரின் அழைப்பு கடிதத்திலும் எடியூரப்பா எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை குறிப்பிடவில்லை” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…