எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு : பெங்களூருவில் ஆளுநர் மாளிகை நோக்கி காங்கிரஸ் தலைமையில் பேரணி!

Default Image

எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து  பெங்களூருவில் ஆளுநர் மாளிகை நோக்கி காங்கிரஸ் மூத்த தலைவர்கள் தலைமையில் பேரணி நடத்தி வருகின்றனர்.

இதேபோல் நேற்று  எடியூரப்பாவுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக சட்டப்பேரவையில் உள்ள காந்தி சிலை முன்பு முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மற்றும் காங். தலைவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.பெரும்பான்மையில்லாத நிலையில் கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் சித்தராமையா, குலாம்நபி ஆசாத், மல்லிகாட்ஜூனே கார்கே, அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்களும் தர்ணாவில் ஈடுபட்டனர்.மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ்- மஜத எம்.எல்.ஏக்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர்.தற்போது காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.இதில் கர்நாடக சட்டப்பேரவை வளாகத்தில் நடக்கும் தர்ணா போராட்டத்தில் மஜத தலைவர் தேவகவுடா பங்கேற்ற்றுள்ளார்.மேலும் கர்நாடக சட்டப்பேரவை முன்பு நடக்கும் காங். எம்எல்ஏக்களின் தர்ணா போராட்டத்தில் மதசார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்