எச்சரிக்கை விடுத்த முதலமைச்சர் மீது வழக்குப்பதிவு …!பாஜக இளைஞர் பிரிவினர் வழக்கு …!
மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் அசாமில் உள்ள 40 லட்சம் மக்களின் பெயர் விடுபட்டுள்ளது.இது தொடர்பாக மேற்குவங்க முதல்வர் மம்தா உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தார்.
இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,அசாமில் நிகழ்ந்தது போல மேற்குவங்கத்திலும் தேசிய குடிமக்கள் அறிக்கையை செயல்படுத்தினால்,உள்நாட்டுப்போர் வெடிக்கும் என்று ராஜ்நாத் சிங்கிடம் எச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்தார்.
இந்நிலையில் தற்போது உள்நாட்டுப்போர் வெடிக்கும் என்று மம்தா கூறியதால் ,அவர் மீது பாஜக இளைஞர் பிரிவினர் அசாம் மாநிலத்தின் திப்ரூகர் மாவட்டத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.