ஊழலை கரை தடுக்கும் சிபிஐ………..கரை படிந்தது…..சிபிஜ_டிஎஸ்பி அதிரடி கைது……!!!

Default Image

ஊழல் வழக்கில் சிக்கிய சி.பி.ஐ டி.எஸ்.பி. தேவேந்திர குமார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
Related image
சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா ஆகிய இருவருக்கிடையே ஏற்கனவே மோதல் இருந்து வந்த நிலையில் சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா 3 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது.
ஊழலை விசாரிக்கும் சிபிஜயை மீதே வழக்கு தொடரபட்டுள்ளது.மேலும்இந்த வழக்கில் தொடர்புடைய சி.பி.ஐ. கூடுதல் காவல் கண்காணிப்பாளரான தேவேந்திர குமார் நேற்று கைது செய்யப்பட்டார். ராகேஷ் அஸ்தானா மீது சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சி.பி.ஐ.கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தேவேந்திர குமார் மீது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Image result for DEVENDRA KUMAR DSP CBI
சி.பி.ஐ. சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தன்மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கூடாது என்று  இன்று டெல்லி நீதிமன்றத்தை அணுகிய நிலையில் அவரது இந்த மனுவின் மீது இன்று விசாரணை நடத்திய நீதிபதி, இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மாவின் முடிவு என்ன? என்பது தெளிவுபடுத்தும் வரை ராகேஷ் அஸ்தானா மீதான குற்றச்சாட்டின் பேரில் எந்த மேல் நடவடிக்கையையும் எடுக்க தடை விதித்து இந்த மனு மிதான மறுவிசாரணையை வரும் 29-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Image result for DEVENDRA KUMAR DSP CBI
இந்நிலையில் நேற்று கைதான தேவேந்திர குமார் வீட்டில் நடைபெற்றது. மேலும் தொழிலதிபரான சத்தீஷ் சனா என்பவர் மீதான குற்ற வழக்கு விசாரணையை நீர்த்துப்போகச் செய்ததற்காக தேவேந்திர குமார் உள்ளிட்டவர்கள் முயற்சி செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
இந்நிலையில் தேவேந்திர குமாரை இன்று பிற்பகல் கோர்ட்டில் ஆஜர்படுத்திய அதிகாரிகள் அவரிடம் மேலும் விசாரிக்க வேண்டியுள்ளதால் விசாரணை காவலில் ஒப்படைக்குமாறு நீதிபதியை கேட்டுக் கொண்டனர். அதன் பேரில் அவரை 7 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்.ஊழல் வழக்கில் சிக்கியுள்ள தேவேந்திர குமார் அலுவலக நடைமுறைகளின்படி பணியிடை நீக்கம் செய்யப்பட்டதாக சி.பி.ஐ. தலைமையகம் இன்று மாலை அறிவித்துள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்