ஊர் சுத்தும் மோடிக்கு 15 நிமிடங்கள் பேசமுடியவில்லை !மோடியை வம்பிழுத்த ராகுல் காந்தி

Published by
Venu

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உலக நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, மக்களவையில் 15 நிமிடங்கள் பேசமுடியவில்லை என்ற  கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாநிலங்களில் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. அதிலும் குறிப்பாக ஆந்திரா, மத்தியப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமாக பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலை விரைவில் சீரடையும் என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது தனது அமேதி தொகுதியில் பயணம்மேற்கொண்டுள்ளார். அவர் டிவிட்டரில் இது குறித்து தெரிவித்துள்ள கருத்தில் கூறியிருப்பதாவது:

பிரதமர் மோடி உலகம் முழுவதும்பயணம் மேற்கொள்கிறார் ஆனால், மக்களவைக்கு வந்து 15 நிமிடங்கள் அவரால் பேசமுடியவில்லை, யாரையும் சந்திக்க முடியவில்லை. ரபேல் போர் விமானக் கொள்முதலில் 45 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. இந்த பணம் அனைத்தும் மோடியின் தொழிலதிபர் நண்பருக்குச் சென்றுவிட்டது.

பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக நிலவும் பணப்பற்றாக்குறை நிலவுகிறது. மீண்டும் பணமதிப்பிழக்கத்தின் தீவிரத்தில் நாடு சிக்கிவிட்டது. பிரதமர் மோடி ஏற்கனவே கொண்டுவந்த, பணமதிப்பிழப்பு முடிவால், நாட்டின் வங்கி நிர்வாக முறையே சீரழிந்துவிட்டது.

பணமதிப்பிழப்பு காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும், ஏடிஎம் மையத்தின் முன் வரிசையில் நின்று இருந்தது. அது குறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, ஒவ்வொரு இந்தியரின் சட்டைப்பாக்கெட்டில் இருந்து ரூ.1000,ரூ.500 எடுத்து, அதை நிரவ்மோடிக்கு மோடி கொடுத்துவிட்டார். ரூ.1000 கோடிக்கும் மேல் அபகரித்துச் சென்ற நிரவ் மோடி குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் ஒருவார்த்தைகூட பேசவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கை அதிபர் தேர்தலில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி..!

இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…

11 hours ago

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

19 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

1 day ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 days ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 days ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 days ago