ஊர் சுத்தும் மோடிக்கு 15 நிமிடங்கள் பேசமுடியவில்லை !மோடியை வம்பிழுத்த ராகுல் காந்தி
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உலக நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, மக்களவையில் 15 நிமிடங்கள் பேசமுடியவில்லை என்ற கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.
கடந்த 2016ம் ஆண்டு கொண்டுவந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின் கடந்த சில மாதங்களாக பல்வேறு மாநிலங்களில் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. அதிலும் குறிப்பாக ஆந்திரா, மத்தியப்பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தீவிரமாக பணத்தட்டுப்பாடு ஏற்பட்டு ஏடிஎம்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இந்த நிலை விரைவில் சீரடையும் என்று மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தற்போது தனது அமேதி தொகுதியில் பயணம்மேற்கொண்டுள்ளார். அவர் டிவிட்டரில் இது குறித்து தெரிவித்துள்ள கருத்தில் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடி உலகம் முழுவதும்பயணம் மேற்கொள்கிறார் ஆனால், மக்களவைக்கு வந்து 15 நிமிடங்கள் அவரால் பேசமுடியவில்லை, யாரையும் சந்திக்க முடியவில்லை. ரபேல் போர் விமானக் கொள்முதலில் 45 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளது. இந்த பணம் அனைத்தும் மோடியின் தொழிலதிபர் நண்பருக்குச் சென்றுவிட்டது.
பல்வேறு மாநிலங்களில் தீவிரமாக நிலவும் பணப்பற்றாக்குறை நிலவுகிறது. மீண்டும் பணமதிப்பிழக்கத்தின் தீவிரத்தில் நாடு சிக்கிவிட்டது. பிரதமர் மோடி ஏற்கனவே கொண்டுவந்த, பணமதிப்பிழப்பு முடிவால், நாட்டின் வங்கி நிர்வாக முறையே சீரழிந்துவிட்டது.
பணமதிப்பிழப்பு காலத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும், ஏடிஎம் மையத்தின் முன் வரிசையில் நின்று இருந்தது. அது குறித்து பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது, ஒவ்வொரு இந்தியரின் சட்டைப்பாக்கெட்டில் இருந்து ரூ.1000,ரூ.500 எடுத்து, அதை நிரவ்மோடிக்கு மோடி கொடுத்துவிட்டார். ரூ.1000 கோடிக்கும் மேல் அபகரித்துச் சென்ற நிரவ் மோடி குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் ஒருவார்த்தைகூட பேசவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.