உ.பி.யில் பாஜக வீழ்த்தப்பட்டதன் மூலம், அக்கட்சியின் ஜாதிய, மதவாத அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி!சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்
உ.பி.யின் நூர்பூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் முடிவும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த தொகுதியில் சமாஜ்வாதி வேட்பாளர் 6,211 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்..
இடைத் தேர்தல் முடிவுகள் குறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். உ.பி.யில் பாஜக வீழ்த்தப்பட்டதன் மூலம், அக்கட்சியின் ஜாதிய, மதவாத அரசியலுக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும், அனைத்து எதிர்கட்சிகளின் ஒன்றுபட்ட முயற்சியால் இந்த வெற்றி கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் ‘‘ஜாதிக்கூட்டலின் சோதனைக்கூடத்திலேயே பாஜக தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் உ.பி. மக்கள் அமைதியையும், மனிதநேயத்தையுமே விரும்புகின்றனர் என்பது தெளிவாகியுள்ளது. பிரதமர் மோடியின் சர்வாதிகார, கொடூர ஆட்சிக்கு மக்கள் முடிவு தயாராகி விட்டார்கள்’’ எனக் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.