உ.பி. முதலமைச்சர் அளித்த காசோலை திரும்பி வந்ததால் மாணவண்அதிர்ச்சி..!

Default Image
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 7வது இடம் பிடித்தவர் அலோக் மிஸ்ரா.
கடந்த மாதம் 29ம் தேதி லக்னோவில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அலோக் மிஸ்ராவை பாராட்டி, ஒரு லட்சம் ரூபாய்க்கு காசோலை வழங்கினார்.
இதையடுத்து, மிஸ்ராவின் தந்தை அந்த காசோலையை கடந்த 5ம் தேதி வங்கியில் செலுத்தினார். ஆனால், காசோலையில் உள்ள கையெழுத்து பொருந்தவில்லை எனக்கூறி வங்கி காசோலை திருப்பி அனுப்பியது. அத்துடன், காசோலையை திருப்பி அனுப்பியதற்காக அபராத கட்டணத்தையும் மிஸ்ராவிடம் வசூலித்தது.
இதையறிந்த மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அந்த காசோலைக்கு பதிலாக வேறு காசோலையை வழங்கி பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
முதல் மந்திரி அளித்த காசோலை வங்கியில் இருந்து திருப்பி அனுப்பப்பட்டது உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்