நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும்போது, உத்திரப்பிரதேச சட்டப்பேரவை தேர்தலையும் நடத்த தயாரா? என பாஜகவுக்கு, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் சவால் விடுத்திருக்கிறார்.
நாடாளுமன்ற தேர்தலின்போதே, அனைத்து மாநிலங்களின் சட்டபேரவைகளுக்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என இந்திய சட்ட ஆணையம் கருத்து தெரிவித்திருந்தது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற இந்த பரிந்துரை முழக்கத்தை பிரதமர் மோடியும் முன்னர் வரவேற்றிருந்தார். இதுதொடர்பாக ஆலோசித்து கருத்து தெரிவிக்க உத்திரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அமைத்த குழுவும் செவ்வாய்கிழமை தனது அறிக்கையை சமர்பித்தது.
இந்நிலையில், லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பிரதமரின் இந்த யோசனையை பின்பற்றி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் அடுத்த ஆண்டில் உத்திரப்பிரதேச சட்டசபை தேர்தலை நடத்த தயாரா? என கேள்வி எழுப்பியிருக்கிறார்.