உ.பியில் கிருஷ்ணர் வேடம் அணிந்ததற்காக மாணவிக்கு மதத்தடை
உத்திர பிரதேச மாநிலத்தில் லக்னோவில் கல்வித்துறை சார்பில் பாலகங்காதர திலக் விழா மீரட்டில் கொண்டாடப்பட்டது. அதில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் பாலகங்காதர திலக் எழுதிய பகவத்கீதையை ஒப்புவிக்கும் போட்டி நடைபெற்றது.
இந்த போட்டியில் அலியாகான் என்கிற முஸ்லீம் என்கிற 15 வயது முஸ்லீம் மாணவி கலந்து கொண்டு கிருஸ்னர் வேடம் அணிந்து 2 வது பரிசை பெற்றார். இந்த போட்டியில் கலந்து கொண்டதற்காக முஸ்லீம் உலமா அமைப்பு மதத்தடை விதித்துள்ளது. மேலும், அந்த பள்ளிக்கு வேறு மதத்தை சேர்ந்த ஒரு மாணவிக்கு மற்றொரு மதத்தை சேர்ந்த கடவுள் வேடத்தை எப்படி அணிய செய்யலாம் என எச்சரித்துள்ளனர்.
இந்த மதத்தடை பற்றி மாணவி கூறுகையில், ‘நான் எனது திறமையை பயன்படுத்தி போட்டியில் வெற்றி பெற்றேன் எனக்கு மத ரீதியிலான தடை விதித்து இருப்பது எனது திறமையை பாதித்து இருக்கிறது. இதனை எதிர்த்து போராடுவேன்’ என்று கூறி உள்ளார்.
source : dinasuvadu.com