உஷாரான இந்தியா!பாலியல் குற்றங்கள் தொடர்பாக மற்ற நாடுகளை பின்பற்ற முடிவு !
இந்தியாவும் பாலியல் குற்றவாளிகளை கண்காணிக்கும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளது.
12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வகைசெய்யும் அவசரச் சட்டத்துக்கு அமைச்சரவையும், குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளித்துள்ளனர். இந்நிலையில், பாலியல் குற்றவாளிகள் குறித்த ஆவணங்கள் தேசிய குற்ற ஆவண காப்பகத்தில் பராமரிக்க திட்டமிட்டுள்ளதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது. இதன்படி, பாலியல் குற்றவாளிகள் குறித்த விவரங்கள் அனைத்து மாநிலங்களிடையே காவல்துறையினரால் பரிமாறிக் கொள்ளப்படும்.
மேலும், இந்தக் குற்றவாளிகள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள். ஏற்கனவே இந்த ஆவண பரிமாற்ற முறை, இங்கிலாந்து ,ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளில் நடைமுறையில் உள்ளது. இந்தப் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.