உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அதிரடி முடிவு..!
கும்பலாகச் சேர்ந்து வன்முறை மற்றும் கொலையில் ஈடுபடுவதை தடுக்க, தேவைப்பட்டால் அரசு சட்டம் இயற்றும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார்.
பசுப் பாதுகாப்பு என்ற பெயரிலும், குழந்தைகள் கடத்தல் வதந்தியாலும், மத கலவரங்கல்களும் மக்கள் கும்பலாகச் சேர்ந்து வன்முறையில் ஈடுபடுவதும், சந்தேகத்திற்குரிய நபரை அடித்துக் கொல்வதும் நாட்டில் அதிகரித்து வருகிறது.இதை தடுக்கவே புதிய சட்டம் கொண்டுவரப்பட்டது.கும்பல் வன்முறையை கட்டுப் படுத்த உரிய நடவடிக்கை எடுக்கு மாறு நாடாளுமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் அறிவுறுத்தியிருந்தது.