உளவுத்துறையினர் கடும் எச்சரிக்கை! காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ 18 தீவிரவாதிகள் தயார் !
உளவுத்துறையினர் காஷ்மீர் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ 18 தீவிரவாதிகள் தயார் நிலையில் இருப்பதாக எச்சரித்துள்ளனர்.
காஷ்மீரின் நான்கு இடங்களில் தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியுள்ளதாகவும், ராணுவ வீரர்களின் குடியிருப்புகளில் உள்ள பெண்கள், குழந்தைகளையும், அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களையும் தீவிரவாதிகள் குறிவைத்திருக்கலாம் என்றும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஆண்டு அமர்நாத் யாத்திரையின் போது 8 பக்தர்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். எல்லையில் பதற்றமான நிலை நீடிப்பதால், ரம்ஜான் பண்டிகையையொட்டி வாகா எல்லையில் இந்திய-பாகிஸ்தான் வீரர்கள் இனிப்புகளை பரிமாறிக் கொள்ளவில்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.