உலக பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி செல்கிறது..இந்தியா வீழ்ச்சியை நோக்கி செல்கிறது…!!அதிகார குவிப்பு பிரதமர் அலுவலத்தில் குவிந்து கிடக்கிறது…!! ரகுராம் ராஜன் நெத்தியடி விமர்சனம்..!!
நாட்டை ஆளும் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி அதாவது ஜிஎஸ்டி இரண்டும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கடந்த ஆண்டு ஒட்டு மொத்தமாக பாதித்துவிட்டது என்று ரகுராம் ராஜன் விமர்சித்து சாடியுள்ளார்.
அமெரிக்காவின் பெர்க்லேயில் அமைந்துள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் எதிர்கால இந்தியா என்கிற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருந்தரங்கில் பங்கேற்ற ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் இந்தியாவின் பொருளாதார நிலை பற்றி பேசினார்.அவர் பேசுகையில் இரண்டு மிகப்பெரிய அதிர்ச்சி நடவடிக்கை அமலுக்கு வரும் வரை நாட்டில் 2012-ம் ஆண்டில் இருந்து 2016-ம் ஆண்டுவரை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி என்பது மிகவேகமாக வளர்ந்து இருந்தது. ஆனால் நாட்டை ஒட்டுமொத்தமாக பாதுப்புக்கு உள்ளாக்கப்பட்ட பண மதிப்பிழப்பு மற்றும், ஜிஸ்டி வரி என அடுத்தடுத்து அதிர்ச்சி இந்த அரசு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஒட்டு மொத்தமாக மிகக் கடுமையாகப் பாதித்தது. சர்வதேச அளவில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உச்சத்தில் இருந்து வந்த நிலையில் இந்த இரு அதிர்ச்சி வைத்தியத்தால் வளர்ச்சி திடீரென சரிந்தது.
நாட்டில் 25 ஆண்டுகளில் 7 சதவீத பொருளாதார வளர்ச்சி என்பது மிகவும் நல்ல வலிமையான கட்டமைப்பு.மேலும் கடந்த 1991-ம் ஆண்டுக்குப் பிறகு பொருளாதார வளர்ச்சியில் கடந்த 25 ஆண்டுகளில் இந்த வளர்ச்சி என்பது எல்லோருக்கும் வியப்புக்குரியது தான்.ஆனால் உண்மையில் இந்த 7 சதவீத பொருளாதார வளர்ச்சி இளைஞர்கள் அதிகமாக இருக்கும் இந்தியாவில் மற்றும் தொழிலாளர் சந்தைக்குப் போதுமானதாக இருக்காது.இதற்கு தேவையான, அதிகமான வேலைவாய்ப்புகள் அவசியமான ஒன்றாகும்.இந்திய பொருளாதார வளர்ச்சி இன்னும் தேவை நாம் இந்த நிலையோடு மனநிறைவு அடைந்துவிட முடியாது.
இந்தியாவை பொருத்தவரை திறந்தவெளி பொருளாதாரத்தைக் கொண்டிருக்கிறது.இதில் உலகப் பொருளாதாரம் வளர்ந்தால் தான் இந்தியப் பொருளாதாரமும் அதிகமாக வளரும். ஆனால் கடந்த 2017-ம் ஆண்டில் என்ன நடந்தது. என்று உலகிற்கே தெரியும் 2017 ல்உலகப் பொருளாதாரம் வளர்ந்தது கொண்டிருக்கிறது ஆனால் இந்தியப் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டிடுக்கிறது.
இதற்கு எல்லாம் முழு முதற்காரணமாக இருப்பது நாட்டில் அதிரடியாக அறிமுகப்படுத்திகிறோம் ,புரட்சியை ஏற்படுத்துகிறோம் என்ற பண மதிப்பிழப்பு நடவடிக்கையும், ஜிஎஸ்டி வரியுமே காரணம். இவை இரண்டும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கடுமையாக பாதித்துவிட்டன. இருபெரிய சிக்கலால், பிரச்சினையால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பின்னுக்கு இழுக்கப்பட்டு விட்டது.இந்த இழுவைகளான பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி ஆகிய சிக்கலில் இருந்து இந்தியப் பொருளாதாரம் மீண்டு, மீண்டும் சுறுசுறுப்பாக செல்லும்போது தான் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை உயர்ந்து சிக்கலைக் கொடுத்தது.மேலும் வாராக்கடன் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையை தடுக்கப்பட்டு அவற்றை களையெடுக்க வேண்டும்.அதற்கு வங்கிகள் தான் தங்களின் வரவு செலவுக் கணக்குகளை சரியாக பராமரிக்கும் போது, இத்தகைய விஷயம் களையப்படும். ஆனாலும் மோசமான கடன்களைச் சமாளிக்கும் அளவுக்கு இங்குள்ள கட்டமைப்பு முறையில் போதுமான கருவிகள் இல்லை.(இதில் இவர் குறிப்பிடுவது கடன்களை சமாளிக்க கூடிய நடவடிக்கை துரித வேகத்தில் இல்லை என்று குற்றம் சாட்டிகிறாரோ..??)
மேலும் பேசிய அவர் திவாலான சட்டத்தை வைத்து கொண்டு மட்டும் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையை நம்மால் சரிசெய்துவிட முடியாது.இது வங்கிகளின் வாராக்கடன் உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களைத் தீர்க்க கூடிய ஒரு கருவி தவிர தீர்வில்லை. ஆனால் வங்கிகளின் வாராக்கடன்களைச் சமாளிக்க பன்முக அணுகுமுறை அவசியமான ஒன்று. ஆனால் இந்தியாவுக்கு வலிமையான பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்கு திறன் இருக்கிறது. இந்த 7 சதவீத வளர்ச்சியை எடுத்துக்கொண்டு அடுத்த கட்டத்துக்கு நாம் நகரலாம்.ஆனால் இந்த 7 சதவீத வளர்ச்சிக்கு கீழே நாம் சென்றால் நாம் புரிந்து கொள்ளவேண்டும் ஏதோ கண்டிப்பாக தப்பு செய்கிறோம் என்று மேலும் இந்த வளர்ச்சியை நாம் தக்கவைக்க மாதத்துக்கு 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க அவசியம் மற்றும் தேவையான ஒன்றாகும். இந்தியா தற்போது 3 மிகப்பெரிய சிக்கலில் சிக்கி தவிக்கிறது.
முதல் சிக்கலாக சிதிலமடைந்த, கிழிந்த அடிப்படைக் கட்டமைப்பு.இந்த கட்டுமானத்துறை நாட்டின் பொருளாதாரத்தை தொடக்கத்தில் வழிநடத்தக்கூடியது மேலும் வளர்ச்சியை உருவாக்க கூடிய வலிமை அதற்கு உண்டு.இரண்டாவது குறுகியகால இலக்குகள் மூலம் மின்துறையைச் உடனாடியாக சீரமைக்க வேண்டும். உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் உண்மையில் தேவைப்படும் மக்களுக்குச் செல்கிறதா என்பதை முதலில் உறுதி செய்ய வேண்டும். மூன்றாவதாக நாட்டின் வங்கிகளை முறையாக சீரமைத்தல். இந்த மூன்று சிக்கல்களை முதலில் தீர்க்க வேண்டும்.
இதுமட்டுமல்லாமல் இந்தியாவில் உள்ள மற்றொரு முக்கியப் பிரச்சினை இருப்பது மத்திய அரசிடம் அரசியல் ரீதியான கொள்கை மற்றும் அவற்றை உருவாக்கும் விதத்தில் அதிகப்படியான அதிகாரக் குவிப்பு பிரதமர் அலுவலகத்தில் இருந்து வரும் உத்தரவுக்கு காத்துக்கொண்டிருக்கிறது.மத்தியஅரசால் மட்டும் இந்தியா வளர்ச்சியை நோக்கிய கொண்டு செல்ல பணியாற்ற முடியாது. அனைத்துத் தரப்பு மக்களும் நாட்டின் சுமையைப் பகிர்ந்து கொள்ளும்போதுதான் இந்தியா சுதந்திரமாக செயலாற்ற முடியும். ஆனால் தற்போதைய சூழலில் பார்க்கும் போது மத்திய அரசு அதிகமான அதிகாரக் குவிப்பில் இருக்கிறது.உதாரணமாக சொல்லவேண்டுமானால் எந்த ஒருமுடிவு எடுக்க வேண்டுமானாலும் பிரதமர் அலுவலகத்திடம் இருந்து அனுமதி பெற வேண்டியிருக்கிறது இதற்கு சுட்டிகாட்ட வேண்டுமாணால் சமீபத்தில் திறக்கப்பட்ட உலகில் மிகப்பெரிய சர்தார் படேல் சிலை பெரிய விவகாரத்தை சொல்லலாம்.
இந்தச் சிலை வடிவமைக்கும் திட்டத்துக்கு கூட பிரதமர் அலுவலகத்தின் அனுமதி தேவைப்பட்டது.என்று மத்திய அரசையும் அதிகார குவிப்பையும் விமர்சித்ததோடு மட்டுமல்லாமல் சரமாரி கேள்வியோடு நாட்டின் பொருளாதாரத்தை கீழ்நோக்கி செல்லவதை தடுக்கவும்,வேலைவாய்ப்பை ஏற்படுத்தால் நாட்டின் வளர்ச்சி எப்படி உயரும்,வாரக்கடன்களை ஏன் முறைப்படுத்த முடியவில்லை என்று சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார் இவருரைய இந்த பேச்சால் பிஜேபி இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் முன்னாள் ரிசவ் வங்கியின் கர்வனாராக இருந்த இவரை மோடி தலையிலான மத்திய அரசு பணிநீட்டிப்பு செய்த போதிலும் இவர் அதனை மறுத்து விட்டார்.அன்றே தெரியுள்ளது இவருக்கு தற்போது கவர்னராக உள்ள உர்ஜித் பட்டேலின் நிலை ஏற்படும் என்று எதிர்கட்சிகள் தங்களுக்குள் முனுமுனுக்கின்றனர்.
DINASUVADU