தன்னை கொன்று விடுவார்கள் என்பதால் தான், தான் நாடு திரும்பவில்லை என வங்கி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடி தெரிவித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரியான நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளார்.அவர் மீது சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடைபெற்று வருகிறது.
டெல்லி சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்ற இது தொடர்பான வழக்கில் நிரவ் மோடியின் வழக்கறிஞர் விஜய் அகர்வால் ஆஜரானார். அப்போது, நிரவ் மோடி, இந்தியா வர விரும்புவதாகவும், ஆனால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், நிரவ் மோடி வர மறுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இது தொடர்பாக அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ.க்கு நிரவ் மோடி கடிதம் எழுதியிருப்பதாகவும் வழக்கறிஞர் விஜய் அகர்வால் குறிப்பிட்டுள்ளார்.
dinasuvadu.com
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…
டெல்லி : கிரிக்கெட் ரசிகர்கள் அனைவருடைய கவனமும் அடுத்த ஆண்டு எப்போது ஐபிஎல் போட்டிகள் தொடங்கப்போகிறது என்கிற எதிர்பார்ப்பில் தான் உள்ளது.…
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…