Categories: இந்தியா

உபி அருகே ஆட்டுக்கறி சமைத்துத்தர மறுத்த மனைவியை அடித்துக் கொலை செய்த கணவன்!

Published by
Venu

உத்தரபிரதேசம் அருகே குடிபோதையில் இருந்த கணவர் மட்டன் சமைத்துத்தர மறுத்த மனைவியை,  தலையில், அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஃபிரோஸ்பாத் மாவட்டத்தில் உள்ள பச்வான் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ராணி (வயது 30), இவர் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளத்தில் ரத்தவெள்ளத்தில் விழுந்து கிடந்தார். அதிகாலை 3.30 மணியளவில் இதனைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற போது, அவர் ஏற்கெனவே மரணமடைந்துவிட்டதாகக் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக காவல்துறையினருக்கு அளித்த தகவலில் அடிப்படையில், அவரது கணவரே அவரை கொலை செய்து 3வது மாடியில் இருந்து உடலை தூக்கி கீழே போட்டது தெரியவந்தது.

கடந்த வியாழன் அன்று இரவு 11.30 மணியளவில் ராணியின் கணவரான மனோஜ், வழக்கம்போலவே குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். தனது மனைவியிடம் மட்டன் சமைத்துத் தரும் படி மனோஜ் வற்புறுத்தியுள்ளார்.

அவரது மனைவி மறுக்கவே, அருகில் இருந்த இரும்புக் கம்பியைக் கொண்டு அவரின் தலையில் அடித்ததில், அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்து போனார்.

பின்னர், கொலை வழக்கில் இருந்து தப்புவதற்காக, தன்னுடைய தந்தை மற்றும் சகோதரர் உதவியுடன் ராணியின் உடலை அவர்கள் வசித்து வந்த அடுக்குமாடி குடியிருப்பின் 3வது தளத்தில் இருந்து கீழே போட்டுள்ளனர்.

காவல்துறையினரின் விசாரணையில் இந்த உண்மை வெளிவந்துள்ளது. கொலை செய்த கணவர் மனோஜ் தலைமறைவாகிவிட்ட நிலையில், அவருக்கு உதவிய அவரின் தந்தை மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர்..

தப்பியோடிய மனோஜை காவல்துறையினர் தேடிவரும் நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Published by
Venu

Recent Posts

“இந்தி தேசிய மொழி அல்ல, அது ஒரு… ” அரங்கத்தை அதிர் வைத்த அஸ்வின்!

“இந்தி தேசிய மொழி அல்ல, அது ஒரு… ” அரங்கத்தை அதிர் வைத்த அஸ்வின்!

காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…

3 hours ago

திருப்பதி உயிரிழப்புகள் : நீதி விசாரணை, ரூ.25 லட்சம் நிவாரணம், அரசு வேலை! சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…

4 hours ago

சத்தீஸ்கர்: இரும்பு ஆலையில் பயங்கர விபத்து… 30க்கும் மேற்பட்டோரின் நிலைமை என்ன?

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…

6 hours ago

ஹைதராபாத் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்க அட்டகாசமான படுக்கை வசதி!

ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக,  அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…

6 hours ago

தம்பி விஜயுடன் ஏன் சண்டை போடுகிறோம்.? சீமான் கொடுத்த விளக்கம்!

சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…

7 hours ago

திருப்பதி மரணங்கள்: ‘கைது நடவடிக்கை வேண்டும்’… பவன், சந்திரபாபு நாயுடுவுக்கு ரோஜா சரமாரி கேள்வி.!

ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…

7 hours ago