உபியில் குழந்தைகள் இறப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவரின் தம்பி மீது துப்பாக்கிச் சூடு!
துப்பாக்கியால் சுடப்பட்ட மருத்துவரின் சகோதரர் உத்தரப்பிரதேசத்தில் சிகிச்சைக்காக 3 மணி நேரம் அலைக்கழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மருத்துவர் கபீல்கானின் சகோதரர் காசிஃப் ஜமீலை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர்.
ஜமீல் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால் அரசு மருத்துவமனையிலேயே சேர்க்க வேண்டும் என்று கூறி போலீஸார் தடுத்து வாக்குவாதம் செய்ததாக கபீல்கான் குற்றம் சாட்டியுள்ளதோடு இது தொடர்பான வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். தற்போது அவர் அபாயகட்டத்தை தாண்டிவிட்டதாகவும் கபீல்கான் கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.