உத்திரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களே இந்திய பின்தங்கியிருப்பதற்கு காரணம்!நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி வருத்தம்
நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் (Amitabh Kant),இந்தியா பின்தங்கியிருப்பதற்கு உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் வளர்ச்சியடையாததே காரணம் என தெரிவித்துள்ளார்.
டெல்லி Jamia Millia Islamia பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய அவர், தென் மாநிலங்கள், மேற்கு மாநிலங்கள் வேகமாக வளர்ந்து வருவதாக குறிப்பிட்டார். பீகார், உத்தரப்பிரதேசம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்கள் சமூக ரீதியாக பின்தங்கியுள்ளதாகவும், வர்த்தக ரீதியாக இந்தியா முன்னேறினாலும், கல்வி, சுகாதாரத்தில் வளர வேண்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், மனித வளர்ச்சி குறியீட்டில் ((Human Development Index)), 188 நாடுகளில் இந்தியா 131-ஆவது இடத்தில் உள்ளதாக, NITI Aayog தலைமை செயல் அதிகாரி அமிதாப் கந்த் தெரிவித்தார். வளர்ச்சி அடையாத மாநிலங்களில், 5 ஆம் வகுப்பு குழந்தைக்கு, 2ஆம் வகுப்புக்கான கணக்கு தெரிவதில்லை; தாய் மொழியைக்கூட அவர்களால் படிக்க முடிவதில்லை. கவனம் செலுத்தாதவரை, வளர்ச்சியை எதிர்பார்க்க இயலாது என்று, NITI Aayog தலைமை செயல் அதிகாரி Amitabh Kant கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.