உத்திரபிரதேசத்தில் 52 சதவீத ஓட்டுபதிவு : உள்ளாட்சி தேர்தல்
உத்தரபிரதேச மாநிலத்தில் 2-வது கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நேற்று நடைபெற்றது. 2ஆம் கட்ட தேர்தல் 25 மாவட்டங்களில் நடைபெற்றது. இதில் மொத்தம் ஒரு கோடியே 29 லட்சம் வாக்காளர்கள் ஓட்டு போட்டனர். இந்த உள்ளாட்சி தேர்தலில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தனது குடும்பத்துடன் லக்னோவில் ஓட்டுபோட்டார்.
நடந்துமுடிந்த 2-வது கட்ட உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் 52 சதவீத ஓட்டுப்பதிவானது. லக்னோ மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அனைத்துக்கட்சிகளும் மேயர் பதவிக்கு பெண் வேட்பாளர்களை நிறுத்தினர். இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர்தான் லக்னோவின் முதல் பெண் மேயர் என்ற பெருமையை பெறுவார்.