உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆத்யநாத் உத்தரப்பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ. தனது மகளைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை, காவல்நிலைய விசாரணையில் உயிரிழந்ததையடுத்து சம்பந்தப்பட்ட எம்எல்ஏவுக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் பங்கெர்மாவ் ((Bangermau)) தொகுதியின் பாஜக எம்.எல்.ஏ. தன்னை கடந்த ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாக இளம்பெண் ஒருவர் புகார் தெரிவித்தார். பாஜக எம்.எல்.ஏ. மீது போலீசில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறிய அவர், லக்னோவில் உள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இல்லம் அருகே தீக்குளிக்க முயற்சித்தார்.
அப்போது, அவரது தந்தையும் போராட்டம் நடத்தினார். இதையடுத்து, கைது செய்து காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த இளம்பெண்ணின் தந்தை, திடீரென உயிரிழந்தார். இதனால், 2 காவல் அதிகாரிகள் மற்றும் 4 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குற்றச்சாட்டுக்கு ஆளான எம்எல்ஏவை விசாரணைக்கு ஆஜராகுமாறு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சம்மன் அனுப்பியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…
கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…
சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…
சென்னை: அண்ணா பல்கலைகழகம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிக்கு நீதி வேண்டி அதிமுக, நாதக, பாமக உள்ளிட்ட காட்சிகள்…
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் 'கேம் சேஞ்சர்' படம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். இந்த திரைப்படத்தில்,…
சென்னை: நந்தா பெரியசாமி எழுதி இயக்கிய, 'திரு மாணிக்கம்' என்கிற ஒரு குடும்ப திரைப்படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி…