உத்தரப்பிரதேசம்:ஆக்சிஜன் இல்லாமல் குழந்தைகள் உயிரிழந்த வழக்கு!கைதான மருத்துவர் கபீல் கானுக்கு ஜாமீன்!
கைதான மருத்துவர் கபீல் கானுக்கு ஜாமீன் வழங்கியது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
டாக்டர் கபீல்கான், கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் இல்லாமல் கொத்துக்கொத்தாக குழந்தைகள் உயிரிழந்தபோது நூற்றுக்கணக்கான குழந்தைகளின் உயிரை பாதுகாத்த மருத்துவர். யோகி ஆதித்யநாத்தின் காட்டு தர்பார் ஆட்சியில் ஆறுமாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரை உறவினர்களும் சக மருத்துவர்களும் சந்திக்க முடியவில்லை. கடந்த ஆண்டு கோரக்பூர் பாபா ராகவ்தாஸ் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 70 சிசுக்கள் உயிரிழந்தன. அப்போது தனது புத்தி்சாலித்தனத்தால் நூற்றுக்கணக்கான சிசுக்களின் உயிரை பாதுகாத்த மருத்துவரை பாராட்ட வேண்டிய அரசு. அவரை அச்சுறுத்தி சிறையிலடைத்தது.
இந்நிலையில் கைதான மருத்துவர் கபீல் கானுக்கு ஜாமீன் வழங்கியது அலகாபாத் உயர்நீதிமன்றம்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.