உத்தரப் பிரதேச மாநிலத்தில் பேருந்து சாலைத் தடுப்பில் மோதிக் கவிழ்ந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயம் அடைந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து உத்தரப் பிரதேசம் மாநிலம் ஃபரூக்காபாத் நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. உத்தரப்பிரதேச மாநிலம் மெயின்புரி ((Mainpuri)) மாவட்டத்தின் தன்ஹரா ((Danhara)) என்ற இடத்தில் பேருந்து அதிவேகத்தில் சென்றதாகவும், அப்போது ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்து சாலைத் தடுப்பில் மோதிக் கவிழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 17 பேர் உயிரிழந்தனர். பேருந்து ஓட்டுநர் உட்பட 12 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசாரும் மீட்புக் குழுவினரும் உடல்களையும் படுகாயம் அடைந்தவர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஓட்டுநர் மயக்க நிலையில் இருப்பதால் அவரிடம் வாக்குமூலம் பெற காத்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிசந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து தான் ஓய்வு பெறுவதாக திடீரென…
டெல்லி : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அம்பேத்கர் பற்றி பேசிய விஷயம் பெரிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடாளுமன்ற…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று,…
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…