உத்தரகாண்டில் சாலையில் சென்ற காரை துவம்சம் செய்த ஒற்றை யானை…!!
உத்தரகாண்டில் யானை ஒன்று சாலையில் சென்ற காரை தாக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
உத்தரகாண்டில் உள்ள ராம்நகரில் வனப்பகுதியையொட்டி சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென சாலைக்கு வந்த யானை ஒன்று காரை மறித்தது. வேகமாக சென்ற காரை மறித்த யானை, தாக்கத் துவங்கியது. இதனையடுத்து, உடனடியாக காரில் இருந்தவர்கள் இறங்கி தப்பியோடினர்.
ஆவேசத்துடன் இருந்த யானை காரை துவம்சம் செய்தது. அதன்பிறகு வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கியை வானத்தை நோக்கி சுட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
DINASUVADU.COM