உண்மையை உடைத்தெறிந்த விமான போக்குவரத்து அமைச்சகம்!உதிரி பாகங்கள் வாங்க நிதி இல்லை!

Default Image

விமான போக்குவரத்து அமைச்சகம்,ஏர்இந்தியா நிறுவனம் மாதந்தோறும் 250 கோடி ரூபாய் வரை ரொக்கப் பற்றாக்குறையை சந்திப்பதால், தேவையான உதிரிபாகங்களை வாங்க முடியாத நிலை இருப்பதாக, ஒப்புக்கொண்டுள்ளது.

நாடாளுமன்ற பொதுக் கணக்கு குழுவில் இந்த தகவலை தெரிவித்துள்ள விமான போக்குவரத்து அமைச்சகம், ரொக்கப் பற்றாக்குறை காரணமாக, பாரமரிப்பு நிதி கிடைப்பது பாதிக்கப்பட்டு விமானங்களை இயக்காமல் நிறுத்தி வைக்கும் நிலை ஏற்படுவதாகவும் கூறியுள்ளது.

முன்னர் விமான எஞ்சின்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு பராமரிப்பு, பழுதுநீக்கப்பட்டு வந்ததாகவும், தற்போது அது உள்நாட்டிலேயே செய்யப்படுவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமானங்களை இயக்குவதன் மூலம் கிடைக்கும் லாபம் அதிகரித்து வந்தாலும், ஒட்டுமொத்த கடன் 48ஆயிரத்து 876 கோடி ரூபாயாக இருப்பதால், பணப் பற்றாக்குறை அபாய கட்டத்திலேயே இருப்பதாகவும் அமைச்சகம் கூறியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்