உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பொய்யான தகவலை கூறியுள்ளது – மல்லிகார்ஜூனே கார்கே …!!
ரஃபேல் விவகாரத்தில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பொய் கூறியுள்ளதாக, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே விமர்சித்துள்ளார்.
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாக சிபிஐ விசாரணை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜூனே கார்கே, நாடாளுமன்றம் மற்றும் பொதுக்கணக்கு குழு முன்பாக, மத்திய தணிக்கை குழுவின் அறிக்கையை தாக்கல் செய்ததாகவும், அதனை பொதுக்கணக்கு குழு ஆய்வு செய்ததாகவும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பொய் கூறியுள்ளதாக தெரிவித்தார்.
இது தொடர்பாக மத்திய தணிக்கை குழு மற்றும் ஆடிட்டர் ஜெனரல் ஆகியோருக்கு சம்மன் அனுப்பவுள்ளதாகவும் மல்லிகார்ஜூன கார்கே கூறினார்.