உச்சநீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்திற்கும், டெல்லி மக்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி! டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்
உச்சநீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்திற்கும், டெல்லி மக்களுக்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று மாநில அரசு, துணைநிலை ஆளுநர் இடையே யாருக்கு அதிகாரம் என்பது குறித்த மேல்முறையீட்டு வழக்கில் டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் ட்வீட் செய்துள்ளார்.
முன்னதாக துணைநிலை ஆளுநருக்கு தனி அதிகாரம் கிடையாது. அமைச்சரவையுடன் இணக்கமாக துணைநிலை ஆளுநர் செயல்பட வேண்டும். எல்லா விஷயங்களிலும் அமைச்சரவைக்கு துணைநிலை ஆளுநரின் ஒப்புதல் அவசியமில்லை என்று தமைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தெரவித்தார்.இது டெல்லி அரசுக்கும் துணைநிலை ஆளுநருக்கும் இடையே நடக்கும் அதிகார மோதல் குறித்த வழக்கின் தீர்ப்பு ஆகும். இந்த வழக்கின் தீர்ப்பு டெல்லி மட்டுமின்றி புதுச்சேரிக்கும் பொருத்த வாய்ப்புள்ளது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.