உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அதிரடி உத்தரவு! தாவூத் இப்ராகிமின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய உத்தரவு !
உச்சநீதிமன்றம் ,1993 மும்பைக் குண்டுவெடிப்பு வழக்கில் தலைமறைவுக் குற்றவாளியான தாவூத் இப்ராகிமின் சொத்துக்களைப் பறிமுதல் செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 1993ஆம் ஆண்டு மும்பையில் தொடர்குண்டுவெடிப்புகளில் முக்கியக் குற்றவாளியான தாவூத் இப்ராகிம் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளார்.
அவருக்கு இந்தியா தவிர பிரிட்டன், ஐக்கிய அரபு அமீரகம், ஸ்பெயின், மொராக்கோ, துருக்கி, சைப்ரஸ், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் சொத்துக்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு மும்பையில் தாவூத் இப்ராகிமின் 3சொத்துக்கள் பதினொன்றரைக் கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டன. இந்நிலையில் தாவூத்தின் சொத்துக்களை அரசு கையகப்படுத்துவதை எதிர்த்து அவரது குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை நீதிபதி ஆர்.கே.அகர்வால் தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்ததுடன், தாவூத் இப்ராகிமின் சொத்துக்களைப் பறிமுதல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.