உச்சநீதிமன்றம் அதிரடி…! வழக்குகளை ஒதுக்குவதற்கும் அமர்வுகளை அமைப்பதற்கும் தலைமை நீதிபதிக்கு அதிகாரம் உள்ளது …!
உச்சநீதிமன்றம், வழக்குகளை ஒதுக்குவதற்கும் அமர்வுகளை அமைப்பதற்கும் தலைமை நீதிபதிக்கு அதிகாரம் உள்ளதாக தெரிவித்துள்ளது. வழக்குகளை ஒதுக்குவதிலும், அமர்வுகளை அமைப்பதிலும் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிப்பதற்கான விதிமுறைகளை உருவாக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வீல்கர், சந்திரச்சூடு ஆகியோர் அடங்கிய அமர்வில் மனு விசாரணைக்கு வந்த போது தலைமை நீதிபதி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் என்றும், நீதிமன்றத்தில் அதிக அதிகாரமிக்கவர் அவர்தான் என்றும், வழக்குகளை ஒதுக்குவதற்கும், அமர்வுகளை அமைப்பதற்கும் அவருக்கு அதிகாரம் உள்ளதாகவும் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.