உச்சநீதிமன்றம் அதிரடி..!பாலில் முறைகேடாக ஆக்சிடோசின் பயன்படுத்த தடை தொடரும்!
ஆக்சிடோசின் மருந்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இன்று தனியார் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது ,ஆக்சிடோசின் மருந்தை இறக்குமதி செய்ய மத்திய அரசு விதித்த தடையை நீக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.மேலும் பால் உற்பத்தியை பெருக்க முறைகேடாக ஆக்சிடோசின் மருந்து பயன்படுத்தப்பட்டதால் தடை விதிக்கப்பட்டது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது . மத்தியஅரசின் தடையை ரத்து செய்யக்கோரி தனியார் நிறுவனங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.