இஸ்லாமியர்கள் நமக்கு வாக்களிக்கவில்லை என்பதால் அவர்களுக்காக எந்த வேலையும் செய்யாதீர்கள் என கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கர்நாடகத்தில் காங்கிரஸ்–ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது. குமாரசாமி முதல்–மந்திரியாகவும், பரமேஸ்வர் துணை முதல்–மந்திரியாகவும் பதவி ஏற்றனர். அதைத்தொடர்ந்து புதிதாக 25 மந்திரிகள் நேற்று முன்தினம் பதவி ஏற்றனர்.
இந்தநிலையில் பிஜாப்பூர் பகுதியில் நடைபெற்ற கூட்டம் ஓன்றில் பங்கேற்று பேசிய அந்த தொகுதியின் எம்.எல்.ஏ பசன்கவுடா பாட்டீல் பேசியதாவது:
பா.ஜ.க. கவுன்சிலர்கள் யாரும் இஸ்லாமியர்களுக்கு எந்த வேலையையும் செய்து தரக் கூடாது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், இஸ்லாமியர்கள் யாரும் பா.ஜ.க.விற்கு வாக்களிக்கவில்லை.
எனவே இந்துக்களுக்கு மட்டுமே உதவ வேண்டும். மேலும் தனது அலுவலகத்திற்கு தொப்பி மற்றும் புர்காவுடன் யாரும் வரக்கூடாது எனவும் எச்சரித்துள்ளார்.
கர்நாடக பா.ஜ.க. எம்.எல்.ஏ.வின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை இன்று…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய்க்கு மத்திய உள்துறை அமைச்சகம் Y பிரிவு பாதுகாப்பை வழங்குவதாக…
கோவை : அண்மைக்காலமாக தெருநாய் கடிபற்றிய செய்திகள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. தெரு நாய்களை கட்டுப்படுத்த அரசு போதிய நடவடிக்கை…
சான் பிரான்சிஸ்கோ : பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) நேற்று இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணியளவில் இருந்து…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் குவெட்டா - பெசாவருக்கு ஜாபர் விரைவு ரயில் 450 பேருடன் சென்றது.…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…