"இஸ்ரோ விஞ்ஞானிக்கு ரூ.50 லட்சம் நஷ்ட ஈடு"கேரள முதல்வர் வழங்கினார்..!!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவில் பணியாற்றிய முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு ரூபாய் 50 லட்சத்தை நஷ்ட ஈடாக கேரள முதல்வர் பினராயி விஜயன் வழங்கியுள்ளார்.
கடந்த 1994 ஆம் ஆண்டு கேரளாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு காவல் துறையால் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது . இவ்விசாரணையின்போது நம்பி நாராயணன் காவல்துறையினரால் சித்ரவதை செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானதையடுத்து அவ்வழக்கு சி.பி.ஐ க்கு மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.ஐயின் விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என கண்டுபிடிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து தனக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்மென நம்பி நாராயணன் தொடர்ந்த வழக்கில் அவருக்கு 50 லட்சம் தொகை வழங்க வேண்டும்மென உச்சநீதிமன்றத்தால் தீர்ப்பளித்தது.இதனால் கேரள முதல்வர் பினராயி விஜயன் 50 லட்சம் தொகைக்கான காசோலையை தற்போது அவருக்கு வழங்கியுள்ளார்.
DINASUVADU