இஸ்ரேல் பிரதமர் பெருமிதம் ! இந்திய சுற்றுப்பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கது….

Default Image

கடந்த 6 நாட்களாக பல்வேறு இடங்களுக்குச் சென்றுவிட்டு, தாயகம் திரும்பிய அவர், அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தனது இந்திய சுற்றுப்பயணத்தை மிகுந்த அர்த்தமுள்ளதாக்கியதற்காக, மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
Image result for india pm-israel pm meeting in india
மரபுகளுக்கு மாறாக, விமான நிலையத்திற்கே வந்து மோடி தன்னை வரவேற்றதை சுட்டிக்காட்டினார். இஸ்ரேல்-இந்தியா இடையிலான உறவு மட்டுமின்றி, இருநாட்டு மக்களுக்கும் இடையிலான உறவுகள் பலமடைவதை, இத்தகைய வரவேற்புகள் எடுத்துக்காட்டுவதாகவும் இஸ்ரேல் பிரதமர் தெரிவித்தார்.
இதற்கு முன்:
6 நாள் அரசுமுறை பயணமாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகூ இந்தியா வந்தார். கடந்த ஜனவரி 14 ஆம் தேதி  டெல்லி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை, பிரதமர் மோடி கட்டித் தழுவி வரவேற்றார்.
Image result for india pm-israel pm meeting in india
முதல் உலகப் போரில், இஸ்ரேலின் ஹைபா நகரை இந்தியர்களும் பங்கேற்ற இம்பீரியல் சர்வீஸ் படை வெற்றிபெற்றதை நினைவுகூரும் வகையில், டெல்லியில் உள்ள ‘தீன் மூர்த்தி சவுக்’ என்ற இடம்,’தீன் மூர்த்தி ஹைபா சவுக்’ என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் மோடியும், நேதன்யாகூவும் பங்கேற்றனர்.
இதையடுத்து, வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இஸ்ரேல் பிரதமரை சந்தித்து முக்கிய ஆலோசனை நடைபெற்றது.
பின்னர், இஸ்ரேல் பிரதமருக்கு ஜனவரி 14ஆம் தேதி  இரவு பிரதமர் மோடி விருந்து அளித்து கவுரவித்தார். ஜனவரி 15 ஆம் தேதி  காலை குடியரசு தலைவர் மாளிகையில் அவருக்கு முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது .
இந்தியா-இஸ்ரேல் இடையே சைபர் பாதுகாப்பு, திரைப்பட தயாரிப்பு உள்ளிட்ட 9 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது . இரு நாட்டு பிரதமர்களும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்த போது, மோடி ஒரு புரட்சிகரத் தலைவர் என நேதன்யாகு புகழாரம் சூட்டினார்.
Related image
பின்னர் டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியும் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் சந்தித்துப் பேசினார்கள். இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே சைபர் பாதுகாப்பு, எண்ணெய் மற்றும் எரிவாயு, திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் ஒன்பது ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பின்னர் நடந்த செய்தியாளர் சந்திப்பில், பிரதமர் மோடி பேசுகையில், வேளாண் துறையில் இஸ்ரேலின் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்வது குறித்து தாங்கள் இருவரும் பேசியதாக தெரிவித்திருந்தார் . இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட வருமாறு, இஸ்ரேலின் பாதுகாப்புத்துறை நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்ததாகவும் அவர் கூறியிருந்தார். இரு நாட்டு மக்களும் நெருக்கமாவதற்கு இந்திய கலாச்சார மையம் ஒன்று இஸ்ரேலில் விரைவில் திறக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
Related image
அறிவியல் கல்வி பயிலும் 100 இளைஞர்கள் ஒவ்வொரு ஆண்டும் பரஸ்பரம் இரு நாடுகளிடையே பயணம் மேற்கொள்ளும் திட்டத்தைத் தொடங்க இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். தனது உரையை முடிக்கும் போது முதலில் மிக்க நன்றி என ஆங்கிலத்தில் சொன்னதோடு டோடா ராபா  என இஸ்ரேலின் ஹீப்ரு மொழியிலும் நன்றி கூறியிருந்தார். இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு பேசுகையில், இஸ்ரேலுக்கு வந்த முதல் இந்திய பிரதமர் என்கிற முறையில் மோடியின் இஸ்ரேல் வருகை ஒரு முன்மாதிரியாக அமைந்தது என்று கூறியிருந்தார். மேலும் மோடி ஒரு புரட்சிகரத் தலைவர் என்றும் இந்தியாவில் ஒரு புரட்சிகர மாற்றத்தை அவர் ஏற்படுத்தியிருப்பதாகவும் நேதன்யாகு கூறியிருந்தார். இந்தியாவில் வசிக்கும் யூதர்களுக்கு ஒரு சில நாடுகளில் இருப்பதைப் போல துன்புறுத்தல் எதுவும் இல்லை என்று கூறிய நேதன்யாகு, இது இந்தியாவின் மகத்தான நாகரிகத்தையும் சகிப்புத் தன்மையையும் ஜனநாயகத்தையும் காட்டுகிறது என்று கூறியிருந்தார். மோடி விரும்பினால் அவரோடு யோகா வகுப்பில் பங்கேற்க தயாராக இருப்பதாகவும் நேதன்யாகு கூறியிருந்தார். இந்தியாவுடன் சேர்ந்து திரைப்படத் தயாரிப்பில் இறங்குவது குறித்து ஆர்வத்துடன் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார். ஐ.நா. பொதுச்சபையில் ஜெருசலேம் விஷயத்தில் இந்தியா இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்தது இரு நாட்டு உறவைப் பாதிக்காது என்றும் நேதன்யாகு கூறியிருந்தார்.
இவ்வாறு இந்தியா மற்றும் இஸ்ரேல் பிரதமர்கள் சந்திப்பில் தெரிவிக்கபட்டிருந்தது …
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்