ஐதராபாத்:
ராகுல்காந்தியை கோமாளி என்று விமர்சித்த தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவுக்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தெலுங்கானா சட்டப்பேரவை கலைப்பு பற்றி செய்தியாளர்களை சந்தித்த சந்திரசேகர ராவ், காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். ராகுல்காந்தி கோமாளி என்பது நாட்டுக்கே தெரியும் என்று அவர் சாடினார்.
இதற்கு பதிலடி கொடுத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான் ரன்தீப் சுர்ஜிவாலா சந்திரசேகர ராவ் பாரதிய ஜனதாவின் முகமூடி என்று குற்றம் சாட்டினார். மேலும் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆட்டுவிக்கும் பொம்மை சந்திரசேகர ராவ் என்று அவர் குற்றம் சாட்டினார்.
மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசம் வெளியேறியதை அடுத்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி பாரதிய ஜனதாவுடன் மறைமுக உறவு வைத்துள்ளதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனை உறுதி செய்யும் விதமாக பிரதமர் மோடியும் தெலுங்கானா மாநிலத்தை பாராட்டி கருத்து தெரிவித்தார். இதற்கு முன் மாநில கட்சிகளை கொண்ட பெடரல் ட்ரெண்ட் அமைத்து தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக அல்லாத அணியை உருவாக்க சந்திரசேகர ராவ் முயன்றது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU
பெர்த் : இந்திய அணியில் சம்பவம் செய்வதற்கு நான் இருக்கிறேன் என்கிற வகையில், இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக…
புதுக்கோட்டை : நகர்ப்புறத்தில் அதிகரித்து வரும் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதுக்கோட்டையில் இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, நேற்று…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், மகாராஷ்டிராவில் 235 இடங்களை கைப்பற்றி…
சவுதி : 18வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச் 14 ம் தேதி தொடங்கி மே 25 ம்…
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…