இவர்தான் என்னுடைய ‘சூப்பர்வுமன்’ – கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் பாராட்டு..!
இந்திய கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் தனது டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் 72 வயது மூதாட்டி லக்ஷ்மி பாய் டைப் ரைட்டிங் செய்து கொண்டிருக்கிறார். வயதான காலத்தில் மிகவும் வேகமாகவும், ஆர்வத்துடனும் பணியாற்றும் அவரை சூப்பர்வுமன் என சேவாக் பாரட்டியுள்ளார். அனைவரும் இவரிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும். எந்த வேலையும் சிறிதல்ல. கற்றுக்கொள்வதற்கும், வேலைப்பார்ப்பதற்கும் வயது ஒரு தடை இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக இவர் விளங்கி வருகிறார். இவ்வாறு சேவார் டுவிட் செய்திருந்தார்.
இதுகுறித்து பேசிய லக்ஷ்மி பாய், ‘விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த என் மகளுக்காக நான் கடன் வாங்கினேன். அதனை திரும்பிச் செலுத்த எனக்கு இந்த வேலையை விட்டால் வேறு இல்லை. அதனால் தான் 72 வயதிலும் கடினமாக உழைத்து வருகிறேன். எனக்கு யாரிடமும் கையேந்தி நிற்க பிடிக்கவில்லை.
என் வீடியோவை வீரேந்தர் சேவாக் வெளியிட்டது மகிழ்ச்சியை அளிக்கிறது. எனது கடன்களை அடைக்க மற்றும் சொந்த வீடு வாங்க உதவி செய்தால் நன்றாக இருக்கும்’ என கூறினார்.