இளைஞர்கள் வேலையின்றித் தவிக்கின்றனர் : ப.சிதம்பரம்..!
அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் நாட்டின் பொருளாதார நிலை மோசமடைந்துள்ளதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம், சரக்கு சேவை வரியாலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் தாக்கத்தாலும் வணிகமும் தொழிலும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
சமூகத்தின் அனைத்துப் பிரிவினரும் துன்பத்தில் உழல்வதாகவும், குறிப்பாக விளைபொருட்களுக்குக் கட்டுப்படியான விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனையடைவதாகவும், இளைஞர்கள் வேலையின்றித் தவிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்தியப் பொருளாதாரத்தின் நான்கு சக்கரங்களில் மூன்று பஞ்சராகிவிட்டதாகவும், பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த நான்காண்டுகளில் குறைந்துகொண்டே வந்துள்ளதாகவும் சிதம்பரம் குறிப்பிட்டார்.