இளைஞர்களை பிரதமர் மோடி ஏமாற்றிவிட்டார் – ராகுல்..!

Default Image
கடந்த பாராளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆண்டுக்கு இரண்டு கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவேம் என பிரதமர் நரேந்திர மோடி வாக்குறுதி அளித்தார். ஆனால், தற்போது அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இளைஞர்களை ஏமாற்றிவிட்டார்.
சீனா, ஒவ்வொறு 24 மணி நேரத்திற்கும் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருகிறது. ஆனால், இந்தியாவோ வெறும் 450 இளைஞர்களுக்கு மட்டுமே வேலைவாய்ப்பினை வழங்குகிறது. கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளதாக பா.ஜ.க மந்திரி ஒருவரே தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க  தலைமையிலான அரசு, 10 முதல் 15 பணக்கார நபர்கள் வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனான ரூ.2.5 லட்சம் கோடியை வாராக்கடனாக தள்ளுபடி செய்துள்ளது. அதே நேரத்தில், விவசாயிகள் தங்களின் வாழ்வாதாரத்திற்காக கேட்கும் விவசாயக் கடன் தள்ளுபடியை இந்த அரசு புறக்கணித்துள்ளது.
நமது நாட்டின் விவசாயிகளுக்கு தேவையான உதவிகளை இந்த அரசு செய்தால் போதும், அவர்கள் சீனாவுடன் போட்டி போடுவார்கள். இவ்வாறு ராகுல் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

today LIVE
Ajithkumar
Pawan Kalyan - Tirupati Temple
Vikravandi - School
GST Tax devolution State wise
Rahul kl Eng Series
vaikunda ekathasi (1)