சண்டிகர்:
அரியானாவில் பைக்கில் வந்து இரு நபர்கள் பெண்ணை கடத்திச் சென்று பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரிவாரி மாவட்டத்தை சார்ந்த கணவனை இழந்த பெண் ஒருவர் உடல் நிலை குறைவு காரணமாக கொசளியில் இருந்து ஜுல்னாவிற்கு மருந்து வாங்க சென்றுள்ளார். மருந்துக்கடை அருகே வந்த போது பைக்கில் வந்த இருவர் அப்பெண்ணிடம் பேசியுள்ளார். தாங்களும் ஜுல்னாவை சார்ந்தவர்கள் என்றும் இந்த உடல் நிலைக் குறைவிற்கு வேறு மருந்து தருவதாக கூறியுள்ளனர். அவர்களின் பேச்சை நம்பிய அப்பெண் அவர்களுடன் சென்றுள்ளார். அவர்கள் அப்பெண்ணை வயல் பகுதியில் வைத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்று வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் குற்றவாளிகளை கண்டுபிடித்துவிட்டதாகவும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என தெரிவித்துள்ளனர்.
பெண்ணை ஏமாற்றி கடத்திச்சென்று கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
DINASUVADU
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…